மட்டன் பக்கோடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கிய மட்டன் - 1/4 கிலோ

தக்காளி - 1

வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

நறுக்கிய மல்லித்தழை - சிறிது

கார்ன்மாவு - 2 மேசைக்கரண்டி

ஆய்ந்த கறிவேப்பிலை - 1/4 கப்

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் துள், உப்பு ஆகியவற்றுடன் பொடியாக நறுக்கிய கறித்துண்டங்களை கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

நீளமாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பொடியாக நறுக்கிய மல்லி உப்பு சேர்த்து கையால் நொறுக்கி விட்டு பிசைந்து மட்டனையும் சேர்த்துக்கலந்து மேலும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரை மணிநேரம் ஊறியதும் கார்ன்மாவை சேர்த்துக்கலந்து கொள்ளவும்.

சூடான எண்ணெயில் பொரிக்கவும். முக்கால் பதம் பொரிந்ததும் கறிவேப்பிலையை சேர்த்து மொறுமொறுப்பாக பொரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: