மட்டன் பக்கோடா
தேவையான பொருட்கள்:
மட்டன் - 7 அல்லது 8 சின்ன துண்டுகள்
வெங்காயம்- 1/2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
பிறகு இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் விடவும்.
கறிவெந்தவுடன்.தண்ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.
பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும். எண்ணேய் பொரிப்பதற்கு காயவைத்து பொரித்து எடுத்து பரிமாறவும்.