மட்டன் சமோசா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 350 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

தயிர் - 1 தேக்கரண்டி

கொத்துக்கறி - 250 கிராம்

பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கப்

கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்

புதினா இலை (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 அங்குலம்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 4

தக்காளி - 1

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதாமாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து சலித்து உப்பு, நெய், தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

கொத்துக்கறியை வாணலியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.

தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேகவைத்து தோலை நீக்கி கையால் பிசைந்து அதனுடன் கரம்மசாலா, 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை, 1 டீஸ்பூன் புதினா இலை சேர்த்து தனியே வைக்கவும்.

கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான உப்பு, மீதியுள்ள கொத்தமல்லி தழை, புதினா இலை, தக்காளி கலவை சேர்த்து பிசைந்து வைக்கவும்.

1/2 மணிக்குப் பிறகு பிசைந்த மாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்து அதை அப்படியே பாதியாக மடித்து மேலே தேய்த்து அதை கோன் வடிவமாக செய்து கொத்துக்கறி கலவையை வைத்து மூடி 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

வாணாலியில் காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: