மசால் வடை (2)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 2 கோப்பை

பெரிய வெங்காயம் - 2

காய்ந்தமிளகாய் - 5

இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு

பூண்டு - 4 பற்கள்

சோம்பு - 1 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

கொத்தமல்லி - 1/2 கட்டு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து ஒரு கைப்பிடியளவு தனியாக எடுத்து வைத்து விடவும்.

வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.

பிறகு பருப்பு ஊறிய தண்ணீரை வடித்து விட்டு, அதனுடன் காய்ந்தமிளகாய், உப்பு, இஞ்சி, ஒரு தேக்கரண்டி சோம்பு, ஆகியவற்றைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்தபருப்புடன், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, மீதமுள்ள சோம்பு, தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

பிறகு எண்ணெய் சட்டியில் எண்ணெயை காய வைத்து அனலை குறைத்து வைத்து, பருப்பு கலவையிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: