மசால் வடை (1)
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பட்டை, ஏலம் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை (பொடியாக அரிந்தது) - 1/2 கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடிக்கவும்.
அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு தனியாக வைக்கவும். மீதியை இரண்டாக பிரிக்கவும்.
மிக்ஸியில் காய்ந்த மிளகாய், பட்டை, ஏலத்தை பொடித்து கொண்டு அதில் பூண்டு, இஞ்சி, பாதி கடலை பருப்பு போட்டு நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து மீதி பாதியை மிக்ஸியில் வைப்பரில் ஒரு சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும்.
இப்போது முதலில் அரைத்தது, இரண்டாவது அரைத்தது, தனியாக எடுத்து வைத்தது எல்லாவற்றையும் கலந்து அதில் உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா அனைத்தையும் போட்டு நல்ல பிசைந்து வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.