மசால் வடை

on on off off off 3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு (200 கிராம்)

வெங்காயம் - 2

புதினா - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 3 அல்லது 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 2 அல்லது 3 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

கடலை பருப்பை கழுவி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில், அரைக்கத் தேவையான பொருட்களை போட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும். ஒரு பிடி பருப்பை தனியே வைத்துவிட்டு மீதமுள்ள பருப்பை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினாவுடன், தனியே எடுத்து வைத்த பருப்பையும், அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் பருப்பு கலவையை வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: