மசாலா வேர்க்கடலை (1)
0
தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
பஜ்ஜி மாவு - 1 1/2 கப்
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 1 ஆர்க்
இஞ்சி, பூண்டு விழுது - தேவையானால்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையையுடன் பஜ்ஜி மாவு, மிளகாய்தூள், கறிவேப்பிலை , உப்பு, சேர்த்து தண்ணீர் தெளித்து பிசிறி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
எண்ணெய்யை காய வைத்து மசாலா சேர்த்த கடலையை உதிர்த்து போடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி விட்டு வெந்ததும் பரிமாறவும்.