மசாலா வேர்க்கடலை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோல் உரித்த வேர்க்கடலை - 1 கப்

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

பச்சை மிளகாய் - 6

சின்ன வெங்காயம் - 6

பெரிய வெங்காயம் - 1

எலுமிச்சம் பழம் - ஒரு மூடி

கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து

தேங்காய் துருவல் - 1/4 கப்

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வேர்க்கடலையில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காயுடன் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பெரிய வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்த கலவையைப் போட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வேர்க்கடலையுடன் மசாலா சேரும் வரை மூடி வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்புகள்: