மசாலா வடை (1)
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்துமல்லி இலை - 1 கப் (அரிந்தது)
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை 4 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு பாதி பாதியாக கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சிறிதாக அரிந்து கொள்ளவும்.
அரைத்த கடலைப்பருப்புடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், பருப்பு கலவையை உருண்டைகளாக செய்து, அதை கைகளினால் வட்டமாக தட்டி போடவும்.
அடுப்பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும். வடைகள் சிவந்தவுடன் அதனை எடுத்து பரிமாறவும். இதுபோல மீதம் உள்ளவற்றையும் வடைகளாக பொரித்து எடுக்கவும்.