மசாலா போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய உருளைக்கிழங்கு - 5

தக்காளி - 1/2

பெரிய வெங்காயம் - 1/2

காரட் துருவல் - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பஜ்ஜி மாவு செய்வதற்கு:

கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

அரிசி - 1 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

செய்முறை:

மிக்ஸியில் கடலை பருப்பு, அரிசி, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரைக்கவும். தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கிழங்கு வெந்ததும் தோல் உரித்து கட்டி இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம், துருவிய காரட் மற்றும் தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு அதனுடன் மிளகாய் தூள், உப்பு போட்டு ஒரு நிமிடம் பிரட்டவும். மிளகாய் வாசனை போகும் வரை வதக்கவும்.

வெங்காயத்துடன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்ந்ததும் மசித்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் பிரட்டவும். கலவைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் சிறு சிறு உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்து தயார் செய்து வைத்துள்ள பஜ்ஜி மாவை போட்டு அதில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

கரைத்த பஜ்ஜி மாவில் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை தோய்த்துக் கொள்ளவும். உருண்டை முழுவதும் மாவு படும்படி தோய்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பஜ்ஜி மாவில் தோய்த்த உருண்டைகளை எண்ணெயில் போடவும். உருண்டையை உடனே திருப்பி விட கூடாது. சிறிது நேரம் எண்ணெயில் அப்படியே இருக்க விடவும்.

பிறகு ஒரு நிமிடம் கழித்து திருப்பி விட்டு வேக விடவும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு பொன்னிறம் ஆனதும் எண்ணெயை வடித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: