மசாலா பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 ஆழாக்கு

உளுந்து - 1 ஆழாக்கு

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 7

தேங்காய்ப்பூ - 1 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு (தாளிக்க) - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் அரை தேக்கரண்டி விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி தேங்காய்ப்பூ போட்டு வதக்கி மாவில் கொட்டவேண்டும்.

அரிசியையும், உளுந்தையும் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, 2 மணி நேரம் ஊறவைத்து, மையாக அரைத்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிபோட்டு, தாளித்ததை போடவும்.

ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, சிறு போண்டாவாக மாவை கிள்ளி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்: