மசாலா கடலை

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலைப்பருப்பு (வறுக்காதது) - 1 டம்ளர்

கடலை மாவு - 1/2 டம்ளர்

சீரகம் - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

சிவப்பு மிளகாய் - 10 அல்லது 12

கறிவேப்பிலை - சிறிது

ரீஃபைண்ட் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிவப்பு மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கடலையை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதில் கடலைமாவு, அரைத்து வைத்துள்ள கலவையையும் போட்டு, இத்துடன் தண்ணீர் சேர்த்து, பக்கோடாவுக்கு பிசையும் பதத்தில் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில் பிசைந்து வைத்துள்ள கலவையை, கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்தாற் போல போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: