மங்களூர் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 400 கிலோ (2 ஆழாக்கு)

மைதா - 100 கிராம் (1/2 ஆழாக்கு)

பச்சைமிளகாய் - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல் ஆட்டவும். அதில் மைதாவை சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.

இரண்டு மணிநேரத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: