மக்காச்சோள பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்து உரித்த மக்காசோளம் - 1

புதினா - 1 கப்

அரிசி மாவு - 2 கப்

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - சிறு துண்டு

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2

கருவேப்பில்லை - சிறிதளவு

கொத்துமல்லி தலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினாவை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும், உரித்த மக்காசோளம் மிக்சியில் போட்டு, ஒன்றுக்கு இரண்டாக அரைத்து கொள்ளவும்

இந்த இரண்டு கலவையும், அரிசி மாவில் சேர்க்கவும். நன்கு கலக்கி கொள்ளவும்

இதனுடன், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கருவேப்பில்லை, கொத்துமல்லி தலை சேர்க்கவும்,

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பக்கோடா மாவு பதத்திற்கு பிசையவும்.

எண்ணெய் நன்றாக சூடான உடன், அதில் போட்டு பொறித்து எடுக்கவும்

குறிப்புகள்: