மகிழம்பூ முறுக்கு (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

முட்டை - 2

எள் - 2 தேக்கரண்டி

முற்றிய தேங்காய் - 1

சீனி - 1 கப்

சோம்பு - 1 தேக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை வறுத்து சற்றுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி முதல்பாலை எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப் பாலுடன் சிறிது உப்பை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

சீனியையும் முட்டையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேங்காய்ப் பாலையும் அதில் ஊற்றி சோம்பை அரைத்துப் போட்டு நன்றாகக் கரைக்கவும்.

இந்த கலவை நன்கு கரைந்த உடன் எள்ளை கழுவி சுத்தம் செய்து மாவில் தூவி ரொட்டிப் மாவைப் போல் நன்றாக அடித்து பிசையவும். மாவை ஓர் அகலத்தட்டில் போட்டு உள்ளங்கையில் நன்கு அலுத்தி பிசையவும்.

மாவைத் இலகிய பதம்வர விடாமல் பாலை சிறிது சிறிதாக சேர்க்கவும். மாவை நன்கு பிசைந்ததும் ஸ்டார் வடிவமான முறுக்குத் தட்டில் வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி நன்கு சூடானதும் தீயைக் குரைத்துக் கொண்டு பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை உள்ளங்கையில் எடுத்து மெதுவாக எண்ணெய்யில் போடவும்.

முறுக்கை புரட்டிப் போடாமல் இலேசான பொன் நிறமாக முறுக்கு வெந்ததும் கண் கரண்டியை வைத்து மெதுவாக எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: