ப்ரெட் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 1 பாக்கெட்

காரட் - 1/4 கிலோ

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பீன்ஸ் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 12

கரம் மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

எலுமிச்சை - பாதி

எண்ணெய் - அரை கப்

உப்பு - 4 1/2 தேக்கரண்டி

செய்முறை:

பெரிய வெங்காயம், காரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து கட்டியில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

பிறகு காரட் மற்றும் பீன்ஸ் போட்டு வதக்கி, அரை கப் தண்ணீர் தெளித்து கிளறிவிட்டு ஒரு தட்டை வைத்து 10 நிமிடங்களுக்கு மூடி வேக வைக்கவும்.

காய் வெந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு போட்டு கிளறிவிடவும். மிளகாய் தூள் வாசனை போகும் வரை மூடி வைக்கவும்.

மிளகாய் வாசனை போனதும் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விட்டு மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு கிளறி, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறிவிடவும்.

காய்களும், மசாலாவும் உருளைக்கிழங்குடன் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவிடவும். கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.

ப்ரெட் ஸ்லைஸின் ஓரங்களை நீக்கிவிட்டு, தண்ணீரில் தோய்த்தெடுத்து இரண்டு கைகளினாலும் அழுத்தி தண்ணீரை வடித்து விடவும். பிறகு தயார் செய்துள்ள மசாலாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து ப்ரெட்டின் நடுவில் வைத்து, நான்கு ஓரங்களையும் எடுத்து மசாலா மறையும்படி மூடி உருட்டி வைக்கவும். இதே போல் மீதமுள்ள ப்ரெட்டிலும் தயார் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் ப்ரெட் உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: