ப்ரெட் பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் (இரண்டாக முக்கோண வடிவில் வெட்டவும்.) - 6 துண்டுகள்
கடலை மாவு - 1/4 கப்
தோசை மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவு, தோசை மாவு, மிளகாய்தூள், உப்புடன், சிறிது நீர் சேர்த்து பஜ்ஜி மாவை விட சற்று இளக்கமாக கரைத்து கொள்ளவும். முக்கோணமாக வெட்டபட்ட ப்ரெட்டை மாவில் தோய்த்து காய்ந்த எண்ணெயில் பொரித்து, பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.