ப்ரெட் பக்கோடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் துண்டுகள் - 5

கடலை மாவு - 150 கிராம்

காய்ந்த சிவப்பு மிளகாய் - 4

நச்சீரகம் - 1/4தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

ஆப்ப சோடா - 2 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மிளகாயில் உள்ள விதைகளை நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ப்ரெட் துண்டுகளை முக்கோண வடிவினில் வெட்டி வைத்து கொள்ளவும்.

மாவில் உப்பு, ஆப்ப சோடா, நச்சீரகம், அரைத்த மிளகாய் பொடி அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் பொரிக்கும் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் ப்ரெட் துண்டுகளை முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

குறிப்புகள்: