ப்ரெட் பக்கோடா
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டுகள் (ஓரம் நீக்கியது) - 2
கடலை மாவு - 3/4 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப்ரெட், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
கடலை மாவுடன், எல்லாம் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு எடுக்கவும்.