ப்ரெட் தயிர் வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வொயிட் ப்ரெட் - 10 ஸ்லைஸ்

வெங்காயம் - 1

கேரட் - 1

மல்லிக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

வறுத்து பொடித்த சீரகதூள் - 1 தேக்கரண்டி

புளிக்காத தயிர்- 1 கப்

சீனி - 1/2 தேக்கரண்டி

ஓமப்பொடி - 1/2 கப் (கட்டாயமில்லை)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ப்ரெட் ஸ்லைஸ்களின் ஓரத்தை நீக்கி தண்ணீரில் முக்கி பிழிந்தெடுக்கவும்.

பிழிந்த ப்ரெட்டை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

சிறுசிறு வடைகளாக தட்டி தட்டில் அடுக்கவும்.

கேரட்டை துருவி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

கேரட், வெங்காயம், மல்லிக்கீரையை வடைகளின் மீது பரவலாக தூவவும்.

தயிரில் உப்பு, சீனி கலந்து மேலே பரவலாக ஊற்றவும்.

மிளகுத்தூள், சீரக தூள் தூவவும். ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: