ப்ரெட் உருண்டை
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 10
பெரிய உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும் ப்ரெட்டின் ஓரத்தை வெட்டிவிடவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு சட்டியில் மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு எல்லாம் போட்டு வதக்கவும்.
அதில் கிழங்கை போட்டு பிரட்டி அடுப்பில் இருந்து இறக்கி உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
ப்ரட்டை எடுத்து தண்ணீரில் நனைத்து பின் தண்ணீரை பிழிந்து விட்டு அதன் நடுவில் உருண்டையை வைத்து அது பிய்ந்து விடாமல் மூடவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.