போண்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1/2 கப்

அரிசி மாவு - 2 கரண்டி

மிளகு,சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - சிறுத் துண்டு

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஊறவைத்து தண்ணீர் நிறைய சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அரைத்த உளுந்து மாவுடன் நறுக்கின இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, அரிசி மாவு கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை உருண்டையாக்கி அதில் போடவும்.

போண்டாவை நன்கு இருபுறமும் சிவக்க விட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: