போண்டா





தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மேல் மாவிற்கு:
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கரம் மசாலா தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மேல் மாவிற்கு கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயார் செய்த உருண்டைகளை மேல் மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.