பொட்டுக்கடலை முறுக்கு

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 படி

பொட்டுக்கடலை மாவு - 1/4 படி

வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

டால்டா - ஒரு மேசைக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு படி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கொதிக்க வைத்த தண்ணீரை அதில் ஊற்றி கரண்டியின் பின்புறத்தை வைத்து கிளறி விடவும்.

நன்கு ஒன்றாக கலந்ததும் அதனுடன் டால்டா, பொட்டுக்கடலை மாவு, எள்ளு, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்ததும் மாவை நன்கு மிருதுவாகும் வரை பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். முறுக்கு உரலில் மூன்று கண் உள்ள அச்சை போட்டு உரல் கொள்ளும் அளவு மாவை வைத்து மூடி ஒரு பேப்பர் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் முறுக்கை போட்டு திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து எண்ணெயில் வரும் நுரை அடங்கியதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: