பேச்சுலர்ஸ் மெது வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறு பருப்பு - 1 கோப்பை

ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி

பிரெட் - 2 துண்டு

நறுக்கிய வெங்காயம் - 1/2 கோப்பை

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி

நறுக்கிய கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி

ஆப்பச்சோடா - ஒரு சிட்டிக்கை

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.

பருப்பில் ஜவ்வரிசியைச் சேர்த்து வெந்நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு அவற்றை அரவை இயந்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் போட்டு கலக்கவும்.

சட்டியில் எண்ணெயை காயவைத்து மாவுக்கலவையிலிருந்து ஒரு எலுமிச்சையளவு எடுத்து தண்ணீர் தடவியுள்ள உள்ளங்கையில் வைத்து தட்டி நடுவில் ஒட்டை செய்து எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: