பேக்ட் பொட்டேடோ சிப்ஸ்
0
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
மிளகாய் பொடி - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை ஸ்லைஸ் செய்து தண்ணீரில் போடவும். இதனால் ஸ்டார்ச் நீக்கப்படும்.
பின் நன்கு டிஸ்யு பேப்பர் கொண்டு உலர்த்தவும்.
பேக்கிங் ட்ரேயில் நறுக்கிய கிழங்கை அடுக்கி சிறிது எண்ணெய் தெளித்து விடவும். பின் 400 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பேக் ஆனதும் வெளியில் எடுத்து மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும். ஹெல்தியான க்ரிஸ்பியான பேக்ட் பொட்டேடோ சிப்ஸ் ரெடி.