பேக்டு மெது வடை

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

ரவை - 1/4 கப்

புளித்த தயிர் - 1/4 கப்

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

இஞ்சி - கால் அங்குலத் துண்டு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊறிய பருப்பு வகைகளுடன் இஞ்சியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் ரவை, தயிர், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

நன்றாகக் கலந்துவிட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

அத்துடன் ஆப்ப சோடா, பேக்கிங் சோடா சேர்த்து எண்ணெய் தடவிய மஃபின் டிரேயில் ஊற்றி முற்சூடு செய்த அவனில் 350 டிகிரி F - ல் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு அவனின் சூட்டை 425 டிகிரி F க்கு அதிகரித்து மேலும் 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். (இவ்வாறு செய்வதால் வடையின் வெளிப்புறம் நன்கு க்ரிஸ்பியாக இருக்கும்).

குறிப்புகள்: