பூசணி பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1/2
சோள மாவு - 50 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2
இஞ்சி துருவல் - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
பச்சை மிளகாய் (நறுக்கியது) - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தர்பூசணியின் வெண்மையான அடி பாகத்தை மட்டும் எடுத்து துருவிக் கொள்ளவும்.
இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.