புழுங்கல் அரிசி முறுக்கு

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 4 டம்ளர்

பொட்டுக்கடலை - 1 டம்ளர்

எள் - 2 தேக்கரண்டி

ஓமம் - 2 தேக்கரண்டி

வெண்ணெய் - 50 கிராம்

பெருங்காயம் - சிறிது

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்து வைக்கவும். எள்ளையும் ஓமத்தையும் தண்ணீர் ஊற்றி, கழுவி, கல் அரித்து தேய்த்து எடுக்கவும்.

அரிசியை கிரைண்டரில் போட்டு கெட்டியாக, நைசாக அரைக்கவும். எடுப்பதற்கு சிறிது நேரம் முன்பு, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். (காரம் தேவைப்படுபவர்கள் 10 காய்ந்த மிளகாய் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.)

அரைத்த மாவுடன் பொட்டுகடலை மாவு, எள், ஓமம், வெண்ணெய் போட்டு நன்றாக பிசையவும்.

தேன்குழல் அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும்.

பிழிந்த முறுக்குகளை காய்ந்த எண்ணெயில் போட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: