புழுங்கலரிசி முறுக்கு (1)
0
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி (ஊறவைத்து நைசாக அரைக்கவும்) - 4 பங்கு
பொட்டுக்கடலை மாவு - 1 பங்கு
வெண்ணைய் - 1/2 கப்
ஓமம் - 1 தேக்கரண்டி
பெருங்காய தண்ணீர் - 1 தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஓமம், உப்பு, பெருங்காயத்தண்ணீர், வெண்ணைய் சேர்த்து பிசைந்து தேவை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்காக பிழிந்து எடுக்கவும்.
எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் வெந்த பின் எடுத்து பரிமாறவும்.