புதினா பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
புதினா - 1 கட்டு
சேமியா - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2
உடைத்த முந்திரி - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு வெந்ததும் வடித்து எடுத்து குளிர்ந்த தண்ணீரில் அலசவும். இதனுடன் பொடியாக நறுக்கிய புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின்னர் முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் போட்டு பக்கோடாக்களாக எடுத்து பரிமாறவும்.