புதினா கொத்தமல்லி பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு

கொத்தமல்லித்தழை (சிறியது) - 1 கட்டு

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

இஞ்சி - 1 சிறிய துண்டு

பச்சை மிள்காய் - 2

சோம்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடலை மாவில், அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சோம்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

எண்ணெயைக் காய வைத்து மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: