புடலங்காய் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1

பச்சை மிளகாய் - 6

பெரிய பூண்டு - 1

இலவங்க பட்டை - சிறிது

இஞ்சி - 100 கிராம்

பொட்டுக் கடலை - 2 ஆழாக்கு

வெங்காயம் - 150 கிராம்

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

டால்டா - 5 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புடலங்காயை விதை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாய், இலவங்க பட்டை, இஞ்சி, பூண்டு, கல் உப்பு இவைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பொட்டுக் கடலையை தனியாக மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

டால்டாவை வாணலியில் இட்டு இதில் வெங்காயம், புடலங்காய் இவைகளை போட்டு வதக்கவும்.

பிறகு இதனை பொட்டுக் கடலை விழுதோடு சேர்த்து பிசைந்து, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து பிசைய வேண்டும்.

மாவு வடை சுடும் பதத்திற்கு வந்ததும் வடைகளை தட்டி எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: