புடலங்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
பிஞ்சு புடலங்காய் - பாதி
கடலை மாவு - 1/2 கப்
பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 5 பல்
மிளகாய் - 5 (அல்லது) மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புடலங்காயை வட்டமாக நறுக்கி, அதனுள்ளே இருக்கும் விதையை நீக்கிவிடவும். (மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல், மொத்தமாகவும் இல்லாமல் நடுத்தரமான அளவில் இருக்க வேண்டும்).
பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் பூண்டு, சீரகம், பெருங்காயம், மிளகாய் அல்லது மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை கடலை மாவுடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, நறுக்கி வைத்துள்ள புடலங்காய் வளையங்களை பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
அரிசியை ஊற வைத்து அரைப்பதற்கு பதிலாக அரிசி மாவைப் பயன்படுத்தலாம்