புடலங்காய் உருண்டை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1

பொட்டுக்கடலை - 1/2 கப்

கசகசா - 1 மேசைக்கரண்டி

லவங்கம் - சிறிது

பட்டை - 1 சிறிய துண்டு

சோம்பு - 1/4 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாயத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புடலங்காய் நடுப்பகுதியினை சுத்தம் செய்து பொடிப்பொடித்துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பொட்டுக்கடலை, கசகசா, லவங்கம், பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் புடலங்காய் துண்டுகளைப்போட்டு லேசாக வதக்கவும்.

இத்துடன் பொடித்த கலவையினை சேர்த்து தேவையான உப்புப்போட்டு அளவாக தண்ணீர் விட்டு பிசைந்து சிறிய உருண்டைகள் பிடிக்கவும்.

ஒரு கடாயில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்:

ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் இவைகளுக்கு நல்ல ஒரு மேச்