பீட்ரூட் வடை (1)
0
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 150 கிராம்
சிவப்பு மிளகாய் - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை பருப்பை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பின் அதனுடன் சி.மிளகாய்,சோம்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
பீட்ரூட் தோல் சீவி,கழுவி விட்டு துருவி கொள்ளவும்.
பீட்ரூட் துருவல்,அரைத்த க.பருப்பு கலவை,மஞ்சள் தூள்,உப்பு,பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி கலந்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்து பரிமாறவும்.