பீட்ரூட் வடை
தேவையான பொருட்கள்:
சிறிய பீட்ரூட் – 2
வெங்காயம் – 1
கடலை பருப்பு – 5 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், பீட்ரூட்டை துருவியும் வைத்து கொள்ளவும்.
துருவிய பீட்ரூட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கடலை பருப்பு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த உடனே சிறு உருண்டைகளாக உருட்டி, பின் வடை போல் தட்டவும்.
எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
வடை கலவையை உடனே செய்து விடவும், இல்லையென்றால் பீட்ரூட் நீர் விடும்.
காரம் அதிகம் சேர்ப்பவர்கள் இன்னும் மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.