பீஃப் வடை
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத பீஃப் - 1/4 கிலோ
கடலை பருப்பு - 100 கிராம்
இஞ்சி பூண்டு - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
தனியாத் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
லெமென் ஜூஸ் - ஒரு பழ ஜூஸ்
வெங்காயம் - 2
துருவிய தேங்காய் - மூன்று பத்தை
முட்டை - 1
கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
எலும்பில்லாத பீஃப்பில் முதலில் பச்சை மிளகாயை அரைத்து ஊற்றவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து நல்ல வேக விடவும்.
வெந்ததும் தண்ணீரை வற்றவிட்டு அதில் ஊறிய கடலை பருப்பு, வெங்கயாம் பொடியாக நறுக்கியது, தேங்காய் துருவல் சேர்த்து நல்ல பிரட்டவும்.
இந்த கலவையை ஆற விடவும் ஆறியதும் கொஞ்ச கொஞ்சமாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
இப்போது முட்டை போட்டு கிளறி சிறிது நேரம் ஊறியதும் கலவை நல்ல கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு வடை பொரிப்பது போல் வேண்டிய வடிவத்தில் பொரித்து எடுத்து பரிமாறவும்.