பீஃப் பக்கோடா
தேவையான பொருட்கள்:
எலும்பு நீக்கிய பீஃப் - 1/4 கிலோ
முட்டை - 2
தயிர் - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
சிகப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் அரை தேக்கரண்டி மிளகு தூள், அரை தேக்கரண்டி சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் முழுவதும் வற்றிய பின். ஆற வைத்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த இறைச்சியில் தயிர், கடலை மாவு, முட்டை, உப்பு, சிகப்பு கலர் பவுடர், மீதம் உள்ள தூள் வகைகளைச் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
அதில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிச் சேர்த்து பிசையவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடா போல் போட்டு பொரித்து எடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி சூடாக பரிமாறவும்.