பிரெட் போண்டா (2)
0
தேவையான பொருட்கள்:
பிரெட் - 10 ஸ்லைஸ்
கடலை மாவு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
துருவிய வெள்ளரிக்காய் - 1
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரெட்டை உதிர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மசாலா, கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, துருவிய வெள்ளரி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், உருண்டைகளை அதில் இட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து பரிமாறவும்.