பிரெட் போண்டா (1)
தேவையான பொருட்கள்:
பிரெட் - 1 பக்கெட்
காரட் - 100 கிராம்
பீட்ரூட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
இஞ்சி - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
சௌசௌ - 100 கிராம்
உருளக்கிழங்கு - 1/4 கிலோ
முட்டைக்கோஸ் - 100 கிராம்
மல்லிக் கீரை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - தேவையான அளவு
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை உப்புப் போட்டு வேகவைத்து தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
காய்கறிகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் போட்டு மற்ற காய்கறிகளையும் போட்டு வதக்கவும்.
பிறகு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேகவைக்கவும்.
வெந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை, மல்லிக் கீரை போடவும்.
ஒரு பிரெட் துண்டை எடுத்து லேசாக தண்ணீரில் நனைத்து பிழிந்து, காய்கறி மசாலாவை எடுத்து பிரெட் நடுவில் வைத்து மசாலா தெரியாமல் மடக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டையை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.