பிரெட் கார போண்டா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
பிரெட் - 3 ஸ்லைஸ்
பச்சை பட்டாணி - 25 கிராம்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2
பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2
தண்ணீர் - 1 கப்
சோம்புப் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
பட்டைத் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கினை வேக வைத்து எடுத்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விடவும்.
ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மிளகாய், சோம்புப் பொடி, பட்டைத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கியதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக நனைத்து உடையாமல் பிழிந்து எடுக்கவும்.
பிறகு பிரெட் துண்டின் நடுவில் உருண்டையாக உருட்டி வைத்த கலவையை நடுவில் வைத்து பிரெட்டை உருண்டையாக உருட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உருட்டி வைத்த பிரெட் போண்டாவை பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.