பிரட் பஜ்ஜி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரட் (பார்டர் பகுதியை நீக்கியது) - 5

கடலை மாவு - 1 கப்

சோள மாவு - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரட்டை 4 துண்டுகளாக்கி கொள்ளவும்.

கடலை மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய் பொடி, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எடுத்து எண்ணையில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: