பிரஞ்சு ஃபிரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

எண்ணெய் - 2 (அல்லது) 3 கோப்பை

உப்பு தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

உருளைகிழங்கை சுத்தமாக கழுவி ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும்.

பிறகு அவற்றை நம் விரல் அளவிற்க்கு தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காய வைத்து நறுக்கிய துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்க்கு வறுத்து எடுத்து வைக்கவும்.

இவ்வாறு பொரிப்பதால் கிழங்கில் உள்ள ஈரம் தான் போய்யிருக்குமே ஒழிய சிப்ஸ் நல்ல மொரு மொருப்பாக இருக்காது. ஆகவே சிறிது ஆறியவுடன் அல்லது தேவைப்படும் பொழுது மீண்டும் எண்ணெயை நன்கு காயவைத்து முன்பு செய்ததுப் போல் போட்டு இந்த முறை நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.

வறுத்த சிப்ஸ்ஸை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு உப்புத்தூளை சேர்த்து நன்கு குலுக்கி விடவும்.

குறிப்புகள்:

தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்