பின்னல் சமோசா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/4 கிலோ

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பச்சைபட்டாணி - 100 கிராம்

காரட் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 3

காரப்பொடி - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை - 1/4 கட்டு

தக்காளி - 1

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதாமாவில் உப்பு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

உருளைக்கிழங்கு, காரட், பச்சைபட்டாணி வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

தக்காளி, வேக வைத்த காய்கறிகள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.

மைதாவை சிறிய அப்பளமாக போட்டு பூரணத்தை நடுவில் நீள வாக்கில் வைத்து இரண்டு ஒரங்களையும் கத்தியால் கீறவும்.

கீறியதை ஒன்றன் மேல் ஒன்று போட்டு நன்றாக அழுத்திவிடவும்.

பின்னல் மாதிரி அழகாக வரும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வெந்ததும் தட்டில் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: