பிங்கர் சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

எலுமிச்சம் பழம் - 1/2 மூடி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைகிழங்கை பெரிய சைஸில் தேர்ந்தெடுக்கவும்.

தோல் அகற்றி பிங்கர் சிப்ஸ் கட்டரில் நீள, நீளமாக நறுக்கவும்.

அல்லது சாப்பிங் போர்டில் கிழங்கை வைத்து முதலில் போதுமான அளவு திக்னெஸ்சில் வட்டம், வட்டமாக நறுக்கவும். பின்னர், குறுக்காக நீளமாக நறுக்கவும்.

இப்பொழுது அழகிய வடிவில் பிங்கர் சிப்ஸ் கிடைக்கும்.

நீரை கொதிக்க வைத்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து, கூடவே உப்பு சேர்த்து நறுக்கிய கிழங்கை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

ஐந்து நிமிடம் அப்படியே வைத்து இருந்து பின் நீரை வடிகட்டி, ஒரு வெள்ளை துணியில் கிழங்கை உலர்த்தவும்.

நன்கு உலர்ந்ததும் எண்ணெயில் கரகரப்பாக பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: