பாசிப்பருப்பு முறுக்கு (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
வறுத்து பொடித்துச் சலித்த பாசிப்பருப்பு மாவு - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை போதுமான நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் நிழலில் உலர வைத்து, இடித்து, பின் நன்கு சலித்துக்கொள்ளவும்.
அத்துடன் மற்ற பொருள்களைக் கலந்து போதுமான நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்து பரிமாறவும்.