பருப்பு வடை (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கோப்பை

துவரம்பருப்பு - 1 கோப்பை

உளுத்தம் பருப்பு - 1/4 கோப்பை

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 4

சோம்பு - 1 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

கொத்தமல்லி - 1/2 கட்டு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புகளை கழுவி சுமார் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஊறிய பருப்பை பாதியாக பிரித்து, ஒரு பாதியில் இஞ்சி, சோம்பை சேர்த்து கொர கொரப்பாகவும், மறுபாதியை ஒன்றும் பாதியுமாக அரைத்து இரண்டையும் உப்பு, மஞ்சள்தூளைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.

பிறகு பருப்பு கலவையில் நறுக்கிய பொருட்களைப் போட்டு கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு பிசைந்து கலக்கி வைக்கவும்.

எண்ணெய் சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து அனலை குறைத்து வைத்து பருப்பு கலவையை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: