பருப்பு வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த கடலை பருப்பு - 1 கப்

சின்ன வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 15

பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 பெரியது அல்லது 2 சிறியது

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 3

இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - ஒரு இன்ச் துண்டு

கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 15 இலை

கொத்தமல்லி இலை (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்

கரம் மசாலா பொடி - 1/4 தேக்கரண்டி

சோம்பு பொடி - 1/2 தேக்கரண்டி

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை தண்ணீர் சுத்தமாக இல்லாமல் ஒரு 20 நிமிடம் வடிக்கட்டியில் கொட்டி வடியவிடவும்.

மிக்ஸியில் முக்கால் அளவு பருப்பை அரைத்துக் கொள்ளவும். அப்படியே மை போல அரைக்க அவசியம் இல்லை.

பின் அதனுடன் மீதமுள்ள முழு பருப்பையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

பின்பு அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும்(எண்ணெயைத் தவிர) போட்டு நன்கு கிளறி வடைகளாகத் தட்டி எண்ணெயை காய வைத்து நல்ல சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: