பருப்பு வடை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1 டம்ளர்
வெங்காயம் - 1 (சிறியது)
பச்சைமிளகாய் - 3
சோம்பு - 1 மேசைக்கரண்டி
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது
இஞ்சி (விரும்பினால்) - சிறிய துண்டு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கடலை பருப்பை 1 மணிநேரம் ஊற வைக்கவும்
பின் மிக்ஸியில் அதை கொரகொரப்பாக,கெட்டியாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்து அரைத்தால் போதும்)
அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சி,கருவேப்பிலை, கொத்தமல்லி,உப்பு அனைத்தையும் சேர்த்து பிசையவும்
வாணலியில் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.